» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதில் மிக முக்கியமான திட்டமான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் வழிவகை செய்யும்.
தகுதிகள் மற்றும் பலன்கள்: அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும். கடந்த 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டத்திற்கான தங்க மோதிரப் கொள்முதல் ஒப்பந்தப் புள்ளிகளை (டெண்டர்) உடனடியாகக் கோருவதற்குக் கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பிற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சரால் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 8:39:42 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)


