» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், அதேநேரம் பெண் கல்வி மற்றும் பெண் சீர்திருத்தம் போன்ற அவரது சமூகக் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றும் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் பயணம் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.தமிழக வெற்றிக் கழகம் 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சி ஆரம்பித்த உடனேயே சிஏஏ சட்டத்தை எதிர்த்து அறிக்கை வெளியிடப்பட்டது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில் பெரியார், காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகிய ஐந்து பேர் கொள்கைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்தியாவில் இரண்டு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட ஒரே கட்சி தவெக ஆகும்.
கடவுள் மறுப்புக் கொள்கை குறித்த நிலைப்பாடு:
பெரியார் கூறிய கருத்துகளில் தங்களுக்கு ஏற்புடையவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். அவரது கடவுள் மறுப்புக் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவும், தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தாங்கள் யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், பெரியார் வலியுறுத்திய பெண் கல்வி, பெண் சீர்திருத்தம் போன்ற பல முக்கியச் சமூகக் கொள்கைகளைத் தவெக ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தனது விளக்கத்தில் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 8:39:42 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)


