» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி- சென்னை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம் : முன்பதிவு தொடக்கம்
வெள்ளி 3, ஜூலை 2026 10:21:15 AM (IST)

தூத்துக்குடி- சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி- சென்னை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 11:30 மணிக்கு புறப்படும். இதுபோல் தாம்பரத்தில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுநாள் 12- 30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நிறுத்தங்கள் : தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு.
இதுபோல் வண்டி எண் 06017 சென்னை தாம்பரத்தில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு ரயில்களை வழங்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
பிச்சாண்டிJul 3, 2026 - 04:02:52 PM | Posted IP 104.2*****
திருநெல்வேலி வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் நின்று செல்ல பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்தால் உதவியாக இருக்கும்
பிச்சாண்டிJul 3, 2026 - 03:41:21 PM | Posted IP 104.2*****
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சென்னையில் இருந்து வரும் முத்து நகர் விரைவு இரயில் தவிர வேறு எந்த இரயிலும் வாஞ்சி மணியாச்சி நிறுத்தத்தில் நிற்பதில்லை ஆகவே சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை செல்லும் இரயில்கள் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் நின்று செல்ல பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்தால் உதவியாக இருக்கும்
ஹென்றிJul 3, 2026 - 01:17:49 PM | Posted IP 162.1*****
இந்த ரயிலை நிரந்தர தினசரி ரயிலாக மாற்றினால் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் குறையும்.
மக்கள்Jul 3, 2026 - 10:52:16 AM | Posted IP 162.1*****
தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலை பழைய மாநகராட்சி பின்புறம் உள்ள ரயில்வே காம்பவுண்ட் சுவரை இடித்து அதில் பெரிய நுழைவாயிலையும் இருவழி சாலையையும் அமைக்க பயணியர் சங்கத்தினர் கோரிக்கை வைக்கவேண்டும்
Mariappan SrinivasanJul 3, 2026 - 10:40:02 AM | Posted IP 172.7*****
These specials have to be permanently operated. After patronge increases frequency have to be increased.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!
வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

ஆட்சியைக் கவிழ்க்கச் சதித் திட்டம்: செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 3:55:01 PM (IST)

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆதரவாளர்கள் முற்றுகை - மறியல் - பரபரப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:16:44 PM (IST)



BerlinJul 3, 2026 - 06:02:05 PM | Posted IP 162.1*****