» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் வெற்றிகளுக்கு எதிராக வழக்கு: முதல்வர் விஜய் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:48:40 AM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான ஜோசப் விஜய் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சட்ட விதிமுறைப்படி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 வழக்குகள் தொடர்ந்தனர். இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
முதலமைச்சர் விஜய்க்கு எதிரான இந்த 4 தேர்தல் வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தத் தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் 3 வாரங்களில் உரிய பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளிவைத்தார்.
இதேபோன்று, தேர்தல் முறைகேடு புகார்களின்கீழ் தொடரப்பட்ட இதர வழக்குகளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

தூத்துக்குடி புதிய சார் ஆட்சியராக விவேக் யாதவ் நியமனம்: தலைமைச் செயலாளர் உத்தரவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:01:06 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்: கணவர், மாமியார் மீது பெற்றோர் புகார்!
செவ்வாய் 7, ஜூலை 2026 10:40:59 AM (IST)

பெண் கழுத்தறுத்துக் கொடூர கொலை; 8 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, ஜூலை 2026 10:14:02 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)


