» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விக்சித் பாரத் ரோஸ்கர், அஜீவிகா மிஷனுக்கான உத்தரவாத திட்டப் பணிகள், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் மிஷன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சுயஉதவிக்குழுக்கள், சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக்கடன் இணைப்பு மற்றும் தீன்தயால் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தேசிய சமூக உதவித் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் 2.0, நகராட்சிகள், பேரூராட்சிகளின் தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்), பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்புறம்), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரசு மானியத்துடன் பயனாளிகள் தாமாக வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தேசிய ஊரக குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத்துறையின் பயறு இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம், வேளாண்மை பொறியியல் துறையின் திறந்தவெளி பாசனக் கிணறு புணரமைத்தல் திட்டம், சூரிய சக்தி மின்வேலி மானியத் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கம் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகிய பணிகள் பரிசீலிக்கப்பட்டன.
நில அளவை ஆவணங்களை கணினிமயமாக்குதல் திட்டம், தமிழ்நாடு மின் விநியோக கழகத்தின் மறுசீரமைக்கப்பட்ட விநியோகத் திட்டம், பிரதம மந்திரி - சூரிய மேற்கூரை மின்னொளி திட்டப்பணிகள், சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் 15வது நிதிக்குழு திட்டக் கட்டிடப் பணிகள், பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் போஷான் அபியான் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் புரட்சிதலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரி இலவச எரிவாயு இணைப்புத் திட்டம், மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சுகம்யா பாரத் அபியான் போன்ற திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அறிவுறுத்தினார்.
இக் கூட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதி, மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் நா.சரவணன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, காயல்பட்டிணம் நகர்மன்றத் தலைவர் முத்து முஹம்மது மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு குறு தொழில் கடன் உதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 11, ஜூலை 2026 3:22:48 PM (IST)


