» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: தம்பதி பலி!
வியாழன் 16, ஜூலை 2026 8:46:32 AM (IST)
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (59), அவரது மனைவி லதா (54) ஆகியோர் பெங்களூரில் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். சொந்த ஊர் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காகத் தங்கமாரியப்பன், லதா மற்றும் லதாவின் தம்பி செந்தில்குமார் (47) ஆகியோருடன் காரில் பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளனர். காரைச் செந்தில்குமார் ஓட்டியுள்ளார்.கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு நைலான் கயிறு பாரம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் 2 லாரிகள் மீது மோதியது. இதில் கார், வாகனங்களுக்கு இடையே சிக்கி சேதமடைந்தது.
இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தங்கமாரியப்பன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் வாகன ஓட்டிகள் மீட்டுத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றித் தங்கமாரியப்பன் உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாகத் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். இது குறித்துத் தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்டெய்னர் லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (52) என்பவரைக் கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி: ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:15:38 AM (IST)

சாலையில் நடந்து சென்ற பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 8:00:31 AM (IST)

தொழில்நுட்பக் கோளாறு சீரமைப்பு: உடன்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
வியாழன் 16, ஜூலை 2026 7:47:05 AM (IST)

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி: பெங்களூரு வாலிபர் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 7:33:10 AM (IST)

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)


