» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை, பொள்ளாச்சி, பழனி வழியாகத் திருச்செந்தூர் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

வெள்ளி 17, ஜூலை 2026 10:42:36 AM (IST)

tiruchendurailwaystation.jpg

ஈரோடு முதல் திருச்செந்தூர் வரை திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாகப் புதிய விரைவு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் குப்புசாமி, மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகனுக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஈரோடு - திருச்செந்தூர் புதிய விரைவு ரயிலைத் திருப்பூர், கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும். இப்புதிய ரயில் சேவை மூலம் மேற்கு மற்றும் தென் தமிழகத்திற்கு இடையே நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். இதனால் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பக்தர்கள் பயனடைவர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குப் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் பழனி மட்டுமின்றி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஆன்மீகத் தலங்களுக்கும் ஒரே ரயிலில் பக்தர்கள் எளிதில் சென்று வர முடியும். மேலும், இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் வணிகர்கள் தென் மாவட்டங்களுடன் நேரடியாகப் பொருட்களைக் கொண்டு செல்லப் போக்குவரத்து வசதி எளிதாகும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஈரோடு - திருச்செந்தூர் விரைவு ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory