» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாடெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: நீட் தேர்வு ஒழிப்பே தீர்வு - மு.க.ஸ்டாலின் அறிக்கை!
புதன் 22, ஜூலை 2026 11:05:20 AM (IST)
நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வை வழங்கும் எனத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆரம்பத்திலேயே எச்சரித்த இயக்கம் திமுக.அதனால்தான் தொடக்கம் முதலே நீட் தேர்வை எதிர்த்து, அத்தேர்வினால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே தலைமை தாங்கி, நாட்டின் முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது. அது நீட் ஒழிப்பு மட்டுமே.
வேறு எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதே தற்போதைய போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இப் பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும். #StopNEET #SaveStudents ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் இப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

குடும்பத் தகராறில் கொடூரம்: 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலங்களாக மீட்பு: போலீஸ் விசாரணை!
புதன் 22, ஜூலை 2026 10:23:10 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: ஒருவர் கைது
புதன் 22, ஜூலை 2026 8:07:45 AM (IST)

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புதன் 22, ஜூலை 2026 8:05:32 AM (IST)

தெருக்குரல் அறிவு கைது நடவடிக்கை: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:15:04 PM (IST)

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)


