» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைப்பதற்காகவே நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், இதில் வெளிநாட்டினரின் சதி உள்ளதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக, சரத்குமார் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி காவல் நிலைய விசாரணை மரணம் குறித்துப் பேசிய அவர்: "தூத்துக்குடி காவல் நிலையத்தில் அருணாசலம் என்ற வாலிபரை காவல்துறையினர் தாக்கியதால் மயங்கி விழுந்து இறந்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். எனவே, இச்சம்பவம் குறித்துத் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்"
"மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு மிகவும் அவசியமானது. காவல்துறையில் சேர்வதற்குக் கூடத் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 2013-ல் நீட் தேர்வு தொடங்கப்பட்ட போது 6 லட்சம் பேர் மட்டுமே எழுதிய நிலையில், தற்போது சுமார் 23 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 13 முறை வினாத்தாள் கசிந்தது. அதற்காக நீட் தேர்வே நடத்தக் கூடாது என்று சொல்வது நியாயமில்லை. இந்தியா பொருளாதார அடிப்படையில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்குப் பிரதமர் மோடி இந்தியாவைச் சிறப்பாக வழிநடத்துகிறார்.
வளர்ந்து வரும் இந்தியாவைச் சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. இதில் வெளிநாட்டினரின் சதி உள்ளது. இளைஞர்கள் இந்த சதிக்கு பலியாகிவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)


