» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!

புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (22). இவர் வெட்டுவெந்நியில் இயங்கி வரும் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாகச் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பணி நேரத்தில் மருத்துவமனையின் மாடியில் இருந்து ஆஷிகா திடீரெனக் கீழே விழுந்து பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ஆஷிகாவிற்கு அண்மையில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், இதுகுறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனப் போலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory