» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 15 முதல் தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

வியாழன் 30, ஜூலை 2026 8:25:34 AM (IST)

MayorRoad.jpg

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர், "பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory