» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:02:10 AM (IST)
கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத்தின் 343-வது ஆண்டு விண்ணேற்பு பெருவிழா வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது குறித்துப் பாளையங்கோட்டை மறைமாவட்ட நிர்வாகி மோட்சராஜன் காமநாயக்கன்பட்டி ஆலயத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6:30 மணியளவில் திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனை நிகழ்வுகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 9 (காலை 8:30 மணி) தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடைபெறும். ஆகஸ்ட் 14 (மாலை 6:00 மணி) ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். ஆகஸ்ட் 15 (அதிகாலை 2:00 மணி) மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் தேரடி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 6:00 மணி மற்றும் 8:00 மணிக்குத் திருப்பலிகள் நடைபெறும். தொடர்ந்து வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக மதியம் 12:00 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, பிற்பகல் 2:00 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, மாலை 4:00 மணிக்கு இந்தியில் திருப்பலி இரவு 7:00 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்
விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் பெரிய பந்தல் அமைத்துத் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பேராலயம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப் பட்டுள்ளது. பேட்டியின் போது பேராலய பங்குத்தந்தை மோயீசன், உதவி பங்குத்தந்தை மரிய ஜோமிக்ஸ், ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பேராலய நிர்வாகம் மற்றும் சுற்றுவட்டார கிராம இறைமக்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : ரூ.25 கோடி மதிப்பிலான மூட்டைகள் எரிந்து நாசம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 9:37:52 AM (IST)

அமைச்சர் நிர்மல் குமார் அநாகரிக பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:27:07 PM (IST)

லயோலா கல்லூரியில் புதிய வகுப்பறை கட்ட டிஎம்பி அறக்கட்டளை ரூ.25 லட்சம் நிதியுதவி!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:13:28 PM (IST)

மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி – தென்பகுதி ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 5:43:58 PM (IST)

தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:48:13 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)


