» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உதயநிதி கைது: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:17:10 AM (IST)

பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துத் தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "ஜூலை மாதத்தில் 42 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும்; ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. இதுபற்றி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார்" எனப் பேசினார்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு கோஷம் எழுப்பவே, அதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், கீர்த்தனா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திலும் மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார்களின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உதயநிதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


மக்கள் கருத்து

BabuAug 4, 2026 - 02:24:27 PM | Posted IP 162.1*****

pechu urimai ilaya nu vanturuvanugale

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory