» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:00:16 AM (IST)
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் நேற்று மாலையில் ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுமக்கள் அனைவருக்கும் பனிமய மாதா ஆலய திருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது: மீன்பிடி குறைவான காலத்திற்கான நிவாரணத் தொகை ₹6,000-லிருந்து ₹7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.93 லட்சம் மீனவக் குடும்பங்கள் பயனடைவர். இதற்காக ₹135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களுக்கு மானியக் கடன் வழங்குவதற்காக ₹12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நிதி நிலைமையைப் பொறுத்து மீனவர்களுக்கான கூடுதல் நிவாரணத் தொகைகள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். மேலும், சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது மீனவர்களுக்கான பல்வேறு புதிய நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொழிலதிபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்து நாங்களும் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். விரைவில் இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளி சாதனை: நீட் தேர்வில் வென்று 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:24:24 PM (IST)

முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்! - எடப்பாடி பழனிசாமி சாடல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:04:54 PM (IST)

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)


