» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பள்ளி சாதனை: நீட் தேர்வில் வென்று 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:24:24 PM (IST)
திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வில் சாதனை படைத்து மருத்துவப் படிப்பில் சேரத் தேர்வாகியுள்ளனர்.
இச்சாதனை திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னால், பிரபல 'கிளாசிக் போலோ' (Classic Polo) நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஆர். சிவராம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், 'வெற்றி டிரஸ்ட்' (VETRY Trust) அமைப்பின் 20 ஆண்டுகாலப் அர்ப்பணிப்பும் பிரதானக் காரணமாக அமைந்துள்ளது.கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்த இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைத் தத்தெடுத்துச் செயல்பட்டு வரும் 'வெற்றி டிரஸ்ட்' அமைப்பு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருமளவில் மேம்படுத்தியது. மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடுதல் ஆசிரிய நியமனத்திற்குத் தேவையான நிதியுதவிகளை வழங்கியது.
NEET உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தது. இத்தகைய தொடர் முயற்சிகளால், ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி எனும் நம்பிக்கையை விதைத்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.
"சமூக மாற்றம் என்பது வெறும் மேடைப் பேச்சுகளாலும், சமூக வலைதளப் பதிவுகளாலும் மட்டும் உருவாகிவிடாது; ஒரு குழந்தையின் கல்வியில் முதலீடு செய்து, அதன் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் போதுதான் உண்மையான சமூகப் பணி நிறைவடைகிறது" என்பதற்கு இச்சாதனையே சான்றாக அமைந்துள்ளது.
கல்விக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு உதவியும் ஒரு குடும்பத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தலைமுறையையும் உயர்த்தும் என்பதை நிருபித்துள்ள இடுவம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த 'வெற்றி டிரஸ்ட்' நிறுவனர் திரு. டி.ஆர். சிவராம் அவர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:58:38 PM (IST)

முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்! - எடப்பாடி பழனிசாமி சாடல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:04:54 PM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:00:16 AM (IST)

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)


