» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:48:03 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் அனுமதி அளிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் 51 நீதிபதிகள் பணியாற்றி வந்த நிலையில், 24 காலிப்பணியிடங்கள் இருந்தன. இக்காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 19 பேரின் பெயர்களைச் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இப்பரிந்துரையை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் ஏற்றுக்கொண்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதனைப் பரிசீலித்த ஒன்றிய அரசு, 15 பேரைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், கூடுதல் நீதிபதிகள் ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்: "நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை : தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் கோரிக்கை!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:13:40 PM (IST)

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 4:59:44 PM (IST)

பழநியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி: கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:39:13 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:28:31 AM (IST)

வீடு புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பள்ளி வேன் டிரைவர் சிறையில் அடைப்பு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:19:56 AM (IST)


