» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொகுதி மறுவரையறை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தீர்மானம் நிறைவேற்றம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:51:11 PM (IST)
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்படவுள்ள நிலையில், மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்கள், தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமையாகும். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தை மாற்றம் செய்யாமல் தற்போதைய நிலையிலேயே நிலைநிறுத்த வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதைய 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே வருகிற 2029 மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அம்சத்தை மட்டும் ஆதரித்தன.
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் வெற்றி பெற்று நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலைக் கைவிட்டதால், இளம்பெண், தாய் கொடூரக் கொலை: காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:15:28 PM (IST)

தமிழ் மொழி குறித்து சர்ச்சை: நிதி அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க சீமான் வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:06:05 PM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:44:45 AM (IST)

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:19:23 AM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)


