» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 8:04:01 AM (IST)

சுங்கச்சாவடிகளின் அருகே வசிப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் கட்டணமின்றி வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் பரவியது.
சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்பது தவறான தகவலாகும். சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதற்காக 'உள்ளூர் மாதாந்திர பாஸ்' (Local Monthly Pass) முறை நடைமுறையில் உள்ளது.
குறிப்பிட்ட அந்தச் சுங்கச்சாவடிக்கு உரிய விதிகளின்படி முறைப்படி விண்ணப்பித்து இந்த மாதாந்திர பாஸைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, வெறுமனே அடையாள அட்டையைக் காட்டி இலவசமாகச் செல்ல முடியாது என்றும், சலுகையைப் பெற விரும்புவோர் அந்தந்தச் சுங்கச்சாவடியின் விதிமுறைகளைப் பின்பற்றி மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:44:45 AM (IST)

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:19:23 AM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)


