» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்திப்பார பகுதியைச் சேர்ந்தவர் அன்சிஜி (21). இவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கல்லூரிக்குச் செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள் அன்சிஜியை சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாகக் கண்டித்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, கல்லூரி நிர்வாகம் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வருவதாகத் தனது தோழிகளுக்குக் கண்ணீருடன் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார்.
கடும் மனவேதனையில் இருந்த மாணவி அன்சிஜி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றார்.படுகாயமடைந்த அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலும் சேர்த்தனர்.
அங்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அன்சிஜி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கல்லூரி வளாகத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:40:26 PM (IST)

பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் : தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:20:18 PM (IST)

தேசியக் கொடியேற்றியபோது பலியான கணவர் : நஷ்டஈடு கோரி மூதாட்டி 50 ஆண்டுகால போராட்டம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:49:47 PM (IST)


