» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:25:05 AM (IST)

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்துத் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 31,336 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.95 லட்சம் குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவடையவிருந்த நிலையில், எந்தவொரு குழந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சேர்க்கைக் காலத்தைச் நீட்டிக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, தகுதியுள்ள குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விக்சித் பாரத் 2047: கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உருவாக்கிய கல்விக்கொடி & லோகோ!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:03:37 PM (IST)

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)


