» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

புதன் 26, ஜூலை 2023 11:23:31 AM (IST)

சென்னையில் நடைபெற உள்ள ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லலித் குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங், சிம்ரன்ஜித் சிங், அபிஷேக், பவன் ஆகிய 5 முன்கள வீரர்கள் இடம் பெறவில்லை. இவர்கள் அனைவரும் தற்போது ஸ்பெயினில் நடைபெற சர்வதேச தொடருக்கான இந்திய அணியில் உள்ளனர். ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக நடுகள வீரர் ஹர்திக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். புரோ லீக் தொடரில் டிபன்டராக செயல்பட்ட மன்பிரீத் சிங் இம்முறை நடுகளத்தில் செயல்பட உள்ளார்.

அணி விவரம்

கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பஹதுர் பதக்

டிபன்டர்ஸ்: ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ்.

நடுகளம்: ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங்.

முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், எஸ். கார்த்தி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory