» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டிக்கான தேதி மாற்றம்?

வியாழன் 27, ஜூலை 2023 12:34:41 PM (IST)

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை கடந்த மாதம் ஐசிசி வெளியிட்டது. அதன்படி அகமதாபாத்தில் அக்.5ம் தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

நவராத்திரி கொண்டாடட்டத்தின் முதல் நாள் அக் 15ம் தேதி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை வேறொரு தேதிக்கு மாற்றுமாறு பிசிசிஐக்கு அம்மாநில போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், அகமதாபாத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு காவலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory