» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குல்தீப் சுழலில் சுருண்டது வெஸ்ட் இன்டீஸ் அணி: இந்தியா அபார வெற்றி!

வெள்ளி 28, ஜூலை 2023 9:41:37 AM (IST)



வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பார்படாசில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. பாண்ட்யா வேகத்தில் மேயர்ஸ் (2) அவுட்டானார். அதானசை 22 ரன்களில் முகேஷ் வெளியேற்றினார். பிரண்டன் கிங் (17) ஏமாற்றினார். குல்தீப் சுழலில் கேப்டன் ஷாய் ஹோப் (43), டொமினிக் (3) உள்ளிட்டோர் சிக்கினர். மற்றவர்களும் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் கைப்பற்றினார்.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு இம்முறை இஷான், சுப்மன் துவக்க ஜோடியாக களமிறங்கியது. சுப்மன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயல்பட்ட இஷான் (52) அரை சதம் அடித்தார். இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் (12), ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory