» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 4ம் தேதி தொடங்க வாய்ப்பு!

சனி 29, ஜூலை 2023 12:27:44 PM (IST)

"டி20 உலகக்கோப்பை 2024 தொடர்" ஜூன் மாதம் 4ந் தேதி தொடங்கி ஜூன் 30ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 8 இடங்களை தேர்வு செய்ய நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டங்களில் இதுவரை ஸ்காட்லாந்து, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 இடங்களுக்கு தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை ஜூன் மாதம் 4ந்தேதி தொடங்கி ஜூன் 30ந்தேதி முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் சுற்றுக்கு தகுதி பெறும் 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் மோதும். அதிலிருந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory