» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

திங்கள் 7, ஆகஸ்ட் 2023 11:17:05 AM (IST)



இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டம் கயானாவில் நேற்றுநடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்களில் அவுட்டானார். மற்றவர்களில் இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்திருந்தனர். இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா முதல் ஓவரே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 

முதல் பந்தில் பிரண்டன் கிங்கையும் நான்காம் பந்தில் சார்லஸையும் அவுட் ஆக்கினார். கைல் மேயர்ஸும் விரைவாகவே வெளியேறினாலும், நிகோலஸ் பூரன் அதிரடி காண்பித்தார்.வான வேடிக்கை காண்பித்த அவரின் அதிரடி பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்கள் சேகரிப்பில் தீவிரம் காட்டியது. 40 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து அவர் விக்கெட்டை பறிகொடுத்த பின் அந்த அணி விக்கெட் சரிவை எதிர்கொண்டது. 

ஹோல்டர், ஹெட்மேயர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, இந்திய அணியின் கை ஓங்க ஆரம்பித்தது. எனினும், அகேல் ஹொசின் மற்றும் அல்சாரி ஜோசப் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வெற்றிபெறவும் வைத்தனர். இதன்மூலம் 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து டி20 தொடரில் இரண்டாவது வெற்றிபெற்றுள்ளது. அகேல் ஹொசின் 16 ரன்களும், அல்சாரி ஜோசப் 10 ரன்களும் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக வெற்றிக்கு உதவினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், சஹால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory