» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மேரி பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்

வெள்ளி 17, நவம்பர் 2023 7:52:16 PM (IST)



சாத்தான்குளம் மேரி இம்மாக்குலேட் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய தேர்வு நடைபெற்றது. 

முகாமை  பள்ளியின்  தாளாளர் மற்றும் முதல்வருமான அருட்தந்தை பேட்ரிக் அந்தோணி விஜயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் சோபுகாய் கோஜுரியு  கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சோபுகாய் கோஜுரியு  கராத்தே பள்ளியின்  மாவட்டச்  செயலாளர் அங்குவேல்  உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமுககான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory