» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி!

புதன் 22, நவம்பர் 2023 5:52:35 PM (IST)

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் கத்தார் அணியிடம்  3-0 எனஇந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக்கில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 

2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன.இந்தியா 'ஏ' பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி குவைத் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் இன்று மோதியது .ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கத்தார் அணியின் டெரெக் மெஷல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் கத்தார் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 47வது நிமிடத்தில் கத்தார் அணியின் அல்மோஸ் அலி, 86வது நிமிடத்தில் யூசுப் அப்தரிசாக் கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் போராடியும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என கத்தார் அணி வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory