» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!

சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். 

இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory