» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் 234 ரன்கள் குவிப்பு: மும்பை அணி சாதனை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 5:15:59 PM (IST)



ஐ.பி.எல். தொடரில் டெல்லிக்கு எதிரான அட்டத்தில் 234 ரன்கள் குவித்ததன் மூலம் மும்பை அணி புதிய சாதனை படைத்துள்ளது. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், டெல்லி கேப்பிடல்சும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்கள் அடித்தார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 205 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் மும்பை அணி இந்த போட்டியின் மூலம் படைத்த சாதனை யாதெனில் : டி20 வரலாற்றில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை பதிவு செய்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக சோமர்செட் - கென்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது சோமர்செட் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் 226 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்த மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - 234 ரன்கள்

2. சோமர்செட் - கெண்ட் - 226 ரன்கள்

3. அயர்லாந்து - நேபாளம் ஏ - 222 ரன்கள்

4. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து - 221 ரன்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory