» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பெங்களூ ஆணியை வீழ்த்தியது பஞ்சாப்: அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!
சனி 19, ஏப்ரல் 2025 10:59:07 AM (IST)

பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை பஞ்சாப் வீழ்த்தியது.
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது
இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் (86 விக்கெட்) படைத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:
அர்ஷ்தீப் சிங் - 86 * விக்கெட்
பியூஷ் சாவ்லா - 84 விக்கெட்
சந்தீப் சர்மா - 73 விக்கெட்
அக்சர் படேல் - 61 விக்கெட்
முகமது ஷமி - 58 விக்கெட்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




