» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜித்தேஷ் சர்மா அதிரடியில் லக்னோவை வீழ்த்தி வெற்றி: புதிய வரலாறு படைத்த ஆர்சிபி!
புதன் 28, மே 2025 10:09:50 AM (IST)

ஜித்தேஷ் சர்மா அதிரடியில் 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி லக்னோவை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 37 பந்தில் 67 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 5வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-ஜித்தேஷ் குமார் ஜோடி இணைந்து அதிரடியாக ஆடியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஜித்தேஷ் சர்மா அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்.சி.பி. அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்னும், மயங்க் அகர்வால் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து AWAY GAMES போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு அணி படைத்தது. பெங்களூரு அணி மொத்தமுள்ள 14 போட்டிகளில், அதன் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

