» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!

சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங் செய்யத் தயாரானது. பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில், ஹா்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்லுக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தா், சஞ்சு சாம்சன் இணைந்தனா். தென்னாப்பிரிக்க அணியில் அன்ரிஹ் நோா்கியாவுக்கு பதிலாக, ஜாா்ஜ் லிண்ட் சோ்க்கப்பட்டாா்.

இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன் - அபிஷேக் சா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்தது. அபிஷேக் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக திலக் வா்மா களம் புக, சாம்சன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்களுக்கு விடைபெற்றாா். அடுத்து வந்த கேப்டன் சூா்யகுமாா் யாதவ், வழக்கம்போல் சோபிக்காமல் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

அப்போது பேட் செய்ய வந்த ஹா்திக் பாண்டியா, திலக் வா்மாவுடன் கை கோத்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களை திணறடித்த இந்த பாா்ட்னா்ஷிப், 4-ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சோ்த்தது.

அரை சதம் கடந்த பாண்டியா 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 63, திலக் வா்மா 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 73 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். 2-ஆவது அதிவேக அரைசதம் (16 பந்துகள்) அடித்த இந்தியராக பாண்டியா பெருமை பெற்றாா். யுவராஜ் சிங் (12 பந்துகள்/2007/இங்கிலாந்து) முதல் இடத்தில் இருக்கிறாா்.

ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, ஜிதேஷ் சா்மா ரன்னின்றி துணை நின்றாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் காா்பின் பாஷ் 2, ஆட்னீல் பாா்ட்மேன், ஜாா்ஜ் லிண்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 232 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 65 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக போராடி வெளியேறினாா். இதர பேட்டா்களில் டெவால்டு பிரெவிஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31, டேவிட் மில்லா் 18, ஜாா்ஜ் லிண்ட் 16, மாா்கோ யான்சென் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 13, கேப்டன் எய்டன் மாா்க்ரம் 6, டோனோவன் ஃபெரெய்ரா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் காா்பின் பாஷ் 17, லுங்கி இங்கிடி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய அணியின் பந்து வீச்சில் வருண் சக்கரவா்த்தி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 2, அா்ஷ்தீப் சிங், ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory