» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: கவுதம் காம்பீர் கருத்து
வெள்ளி 6, ஜூன் 2025 10:08:24 AM (IST)
பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெற்றி கொண்டாட்டங்களை மைதானத்திற்குள் நடத்தலாம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து அவர் கூறியதாவது: அனைத்தையும் விட உயிர் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதை சொல்வேன். எதிர்காலத்தில் ரோடு ஷோ நடத்தும் போது இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெற்றி கொண்டாட்டங்களை மூடிய கதவுகளுக்குள் அல்லது மைதானத்திற்குள் நடத்தலாம்.உயிரிழந்தவர்கள் நினைவாக எனது எண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது. பேரணியை நடத்தி இருக்கவும் கூடாது. என்னை பொறுத்தவரை ரோடு ஷோ நடத்தி இருக்கக்கூடாது.வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இவ்வாறு கவுதம் காம்பீர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




