» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மைதானத்தில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின்.. வீடியோ வைரல்
திங்கள் 9, ஜூன் 2025 11:01:49 AM (IST)

டி.என்.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் அவுட் கொடுத்த பெண் நடுவருடன் அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டி.என்.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, திருப்பூரின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது.
அந்த அணியில் கேப்டன் ஆர்.அஸ்வின் (18 ரன்), ஷிவம் சிங் (30 ரன்), ஜெயந்த் (18 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். திருப்பூர் தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் இசக்கிமுத்து 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் வழங்கி 4 விக்கெட்டுகளை அள்ளினார். சுழற்பந்து வீச்சாளர்கள் மதிவாணன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. விக்கெட் கீப்பர் துஷர் ரஹேஜா 64 ரன்கள் (39 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இந்த ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
Ash அண்ணா Not Happy அண்ணாச்சி! 😶🌫
— Star Sports Tamil (@StarSportsTamil) June 8, 2025
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில் #TNPLOnJioStar#TNPL#TNPL2025pic.twitter.com/Csc2ldnRS3
ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் நடுவர் கிருத்திகா இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். வேறு டிஆர்எஸ் வேறு இல்லை என்பதால் அஸ்வின் கோபத்தில் பேட்டை தனது காலில் அடித்து விட்டு சென்றுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




