» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தெற்காசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை யாஜிக் தங்கம் வென்றார்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:05:53 PM (IST)
தெற்காசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை யாஜிக் தங்க பதக்கம் வென்றார்.
பூடானில் 15வது தெற்காசிய ‘பாடி பில்டிங்’ அண்டு ‘பிசிக்’ சாம்பியன்ஷிப் போட்டிகள் 5 நாட்கள் நடந்தது. இதில் 155 மீ., உயரம் கொண்டவர்களுக்கான பிரிவில் அசத்திய இந்திய வீராங்கனை யாஜிக் ஹில்லாங் (அருணாச்சல பிரதேசம்) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு பிரிவில் யாஜிக் வெள்ளி வென்றார்.
அருணாச்சல பிரதேசம் சார்பில் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என சாதனைக்கும் யாஜிக் சொந்தக்காரர் ஆனார். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட செய்தியில்,‘‘அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த யாஜிக், தெற்காசிய ‘பாடி பில்டிங்கில்’ தங்கம், வெள்ளி என இரு பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




