» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை கேசவ் மகராஜ் படைத்தார்.
ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)

இரு இன்னிங்சிலும் சதம்... ரிஷப் பண்ட் சாதனை!
செவ்வாய் 24, ஜூன் 2025 10:09:43 AM (IST)

யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை : பும்ரா பெருந்தன்மை!!
திங்கள் 23, ஜூன் 2025 4:59:27 PM (IST)

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம்: தோனியை முந்திய ரிஷப் பண்ட்
ஞாயிறு 22, ஜூன் 2025 11:44:26 AM (IST)
