» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!

திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)



தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி கோப்பையை வென்றது. 

திண்டுக்கல்லில் நேற்று மாலை நடைபெற்ற டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 220 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ரன்கள் மட்டுமே திரட்டி படுதோல்வியடைந்தது.

இதன்மூலம், 118 ரன்கள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory