» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விம்பிள்டன் நாயகன்: ஜனநாயகன் விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் போஸ்டர் வைரல்!!

திங்கள் 14, ஜூலை 2025 11:25:38 AM (IST)



விம்பிள்டன் நாயகன்' என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதனையடுத்து விம்பிள்டனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், விம்பிள்டன் நாயகன்' என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் விஜய் மக்களிடம் செல்பி எடுப்பது போன்ற போஸ்டரை ரெபரென்ஸாக பயன்படுத்தி இந்த போஸ்டரை விம்பிள்டன் வடிவமைத்துள்ளது. இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory