» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பதவி விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் பிசிசிஐ உறுப்பினர்கள் தேர்வுக்கான விதிமுறைகளை வகித்துள்ளது. அதன்படிதான் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின்படி 70 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு செய்யப்பட்டால், பதவிக்கான தகுதி காலம் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்.
மேலும், தொடர்ந்து 6 வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் அல்லது 9 ஆண்டுகள் இடைவெளி விட்டு பதவி வகிக்கலாம். 9 ஆண்டுகள் நிறைவடைந்தால் அவர்கள் பதவியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ரோஜன் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக Dream11 இருந்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் Dream11 அதன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதனால் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் எனத் தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:54:13 AM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 6, அக்டோபர் 2025 8:29:53 AM (IST)

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
சனி 4, அக்டோபர் 2025 4:22:32 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!!
சனி 4, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)
