» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் தோனி
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:14:58 PM (IST)
ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதனிடையே 44 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார்.
இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி விளையாட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

