» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி உலக சாதனை!

திங்கள் 8, செப்டம்பர் 2025 4:06:03 PM (IST)



தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இங்கிலாந்து உலக  சாதனை படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 110 ரன்களும், ஜோ ரூட் 100 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் மற்றும் கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20.5 ஓவர்களில் 72 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற மாபெரும் உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

அந்த பட்டியல்:

1. இங்கிலாந்து - 342 ரன்கள்

2. இந்தியா - 317 ரன்கள்

3. ஆஸ்திரேலியா - 309 ரன்கள்

4. ஜிம்பாப்வே - 304 ரன்கள்

5. இந்தியா - 302 ரன்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் தோனி

வியாழன் 4, செப்டம்பர் 2025 3:14:58 PM (IST)

Sponsored Ads






Tirunelveli Business Directory