» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்: இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 11:25:02 AM (IST)

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், நடப்பு சாம்பியன் தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் கோலடித்தார். மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் சிங் 27-வது மற்றும் 44-வது நிமிடத்தில் கோல் போட்டார். 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டெயின் சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் இந்த வெற்றி, இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)

உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 11:41:08 AM (IST)

ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி உலக சாதனை!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:06:03 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவின் புதிய தோற்றம் வைரல்!
சனி 6, செப்டம்பர் 2025 4:27:59 PM (IST)

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவிப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:17:13 PM (IST)
