» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் பெருமையை உயர்த்திய வைஷாலி: நயினார் நாகேந்திரன் பாராட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:19:23 PM (IST)
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நடத்திய மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை வைஷாலிக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "சமீபத்தில் நடைபெற்ற 'FIDE Women's Candidates Chess World Championship Challenger' பட்டத்தை வென்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள வைஷாலிக்கு எனது இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உலக அரங்கில் நம் பாரத நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ள அவரது இந்தச் சிறப்பான சாதனை மிகவும் பாராட்டுக்குரியது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையின் மூலம் அவர் எடுத்து வரும் இந்த வெற்றிப் பயணம், வரும் காலங்களில் இன்னும் பல உயரங்களை எட்டட்டும்.
உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றியுள்ள வைஷாலி, வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன்.” இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)

உலகக் கோப்பையில் ஸ்பெயின் வரலாற்றுச் சாதனை : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது!
சனி 11, ஜூலை 2026 12:29:27 PM (IST)


