» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலி (Galle) மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொழும்பிலும் நடைபெறவுள்ளது. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி விவரம்:
ஷுப்மன் கில் (கேப்டன்)
கே.எல். ராகுல் (துணை கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல்
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின்
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்நூர் பிரார்
உடற்தகுதி நிபந்தனை: அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வீரர் சாய் சுதர்ஷன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது 100 சதவீத உடற்தகுதியை (Match Fitness) நிரூபித்தால் மட்டுமே இத்தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது.
மேலும், காயம் காரணமாக இளம் வீரர்கள் நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)

காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி: வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:39:11 PM (IST)

4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)


