» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி விக்கெட் பேட்டருமான அஜின்கியா ரஹானே (38), சர்வதேச மற்றும் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத போதிலும், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்த ரஹானே, தற்போது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில்: "எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமும், ஒரு முடிவும் இருக்கிறது. நேரம் வரும்போது அதை மதித்து நாம் முன்னேற வேண்டும். எனது பேட்டிங்கில் நான் எப்போதும் சரியான நேரத்தை (Timing) நம்பியிருக்கிறேன்; அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளேன்.
இன்று சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குச் செல்ல இதுவே சரியான நேரம் என உணர்கிறேன். நேர்மையுடன் விளையாடினேன். ஏற்ற இறக்கங்களின் போது ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்." என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ரஹானேவின் சாதனைப் பயணம்:
2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய ரஹானேவின் சர்வதேசச் சாதனைகள்:
சர்வதேசப் போட்டிகள்: 85 டெஸ்ட், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,414 ரன்களைக் குவித்துள்ளார்.
ஐபிஎல் பயணம்: 6 அணிகளுக்காக மொத்தம் 212 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
கேப்டன்சி சாதனை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட 6 போட்டிகளில், 4 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்; 2 போட்டிகள் டிராவில் முடிந்தன (தோல்வியே இல்லை).
வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றி:
2020-21 பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரில், அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிப் பின்னடைவைச் சந்தித்தது. விராட் கோலி தாயகம் திரும்பிய நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹானே, தனது சிறப்பான சதத்தாலும் அசத்தலான தலைமைப் பண்பினாலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடர் வெற்றியைக் கைப்பற்றிக் கொடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)

காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி: வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:39:11 PM (IST)


