» சினிமா » செய்திகள்

பிரபாஸ், அமிதாப் பச்சனுடன் இணைந்தார் கமல்ஹாசன்!

திங்கள் 26, ஜூன் 2023 11:06:30 AM (IST)




புராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சனுடன் இணைந்தார் கமல்ஹாசன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஆதிபுருஷ் படத்துக்கு பிறகு தற்போது புராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் தீபிகா படுகோனே, தீஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

மேலும், இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் அதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின. இந்நிலையில் இதனை படத்தை தயாரித்து வரும் வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஸ்பெஷல் புரமோவையும் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory