» சினிமா » செய்திகள்

விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவேன்: இயக்குநர் வெற்றிமாறன் உறுதி!

செவ்வாய் 27, ஜூன் 2023 11:42:16 AM (IST)

நிச்சயம் விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவேன் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். விடுதலை 2, வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை முடித்த பின்பு நடிகர் விஜய்யுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல்,வடசென்னை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன்.

"நடிகர் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவது குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிக்க தயாராக உள்ளார். கைவசம் உள்ள படங்களை முடித்த பின் நிச்சயம் விஜய்யுடன் இணைவேன். அந்த நேரம் நான் சொல்லும் கதை அவருக்கு பிடிக்க வேண்டும்!" என கூறினார்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory