» சினிமா » செய்திகள்

சிங்கத்தை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்!

வெள்ளி 30, ஜூன் 2023 12:25:38 PM (IST)

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் "ஷேரு" என்ற 3 வயது ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.

இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நடிகர் சிவகார்த்திகேயன் "ஷேரு" என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு கண்டிப்பாக ஷேரு சிங்கத்தின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "எந்தவொரு தனிநபரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு விலங்கைத் தத்தெடுக்கலாம், இதன் மூலம் நீங்க பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் தீவன தேவைகளை நீங்கள் கவனித்துக்கொள்ள முடியும்" என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் இதே பூங்காவில் ஒரு பெண் யானையை 6 மாதங்களுக்கு தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory