» சினிமா » செய்திகள்

வைரலாகும் நடிகர் அஜித்தின் புதிய தோற்றம்!

சனி 8, ஜூலை 2023 3:14:04 PM (IST)



நடிகர் அஜித்குமாரின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

’துணிவு’ படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமாரின் அடுத்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவனின் கதையில் தயாரிப்புத் தரப்பிற்கு திருப்தி இல்லாததால் அவர் அந்தப் படத்தில் இருந்து விலக நேரிட்டது. 

படத்தின் கதையில் தான் தலையிடவில்லை எனவும், தயாரிப்புத் தரப்பிற்கு திருப்தி கொடுத்தால் படப்பிடிப்பிற்குச் செல்லலாம் என நடிகர் அஜித் தெரிவித்து இருக்கிறார். இதனை அடுத்தே லைகா நிறுவனம் இயக்குநர் மகிழ் திருமேனியை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்தது. இதனை உறுதி செய்து, படத்தின் தலைப்பு ‘விடாமுயற்சி’ எனவும் அறிவிக்கப்பட்டது.

படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் வேலையில் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தகவல் வெளியான நிலையில், நடிகர் அஜித்தின் புதிய தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் தாடி ட்ரிம் செய்து உடல் இளைத்து காணப்படுகிறார் அஜித். ‘விடாமுயற்சி’ படத்திற்கான புதிய தோற்றம் என ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory