» சினிமா » செய்திகள்
சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல் ரிலீஸ்!
சனி 23, செப்டம்பர் 2023 5:09:01 PM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளன.
இந்த தாமதம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட படக்குழு, "அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம். படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது” என்று தெரிவித்திருந்தது.
முன்னதாக, தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:31:51 AM (IST)

ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:35:06 PM (IST)

தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தி படம்: பைசன் குறித்து மாரி செல்வராஜ்..!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:44:24 AM (IST)

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் இயக்குநர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்
சனி 11, அக்டோபர் 2025 4:11:49 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)
